பள்ளத்தில் இறங்கிய சரக்கு வாகனம்


பள்ளத்தில் இறங்கிய சரக்கு வாகனம்
x
தினத்தந்தி 12 May 2022 8:15 PM IST (Updated: 12 May 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

பள்ளத்தில் இறங்கிய சரக்கு வாகனம்

குன்னூர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து மாம்பழ லோடு ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலையில் ஊட்டி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த வாகனத்தில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர். குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது, டிரைவர் உள்பட 3 பேருக்கும் தூக்கம் வந்தது. 

உடனே சாலையோரத்தில் சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென சரக்கு வாகனம் பின்னோக்கி நகர்ந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக வாகனம் கவிழவில்லை. இதனால் அதில் இருந்த 3 பேரும் காயமின்றி தப்பினர். இதை அறிந்து வந்த குன்னூர் போலீசார் மீட்பு வாகனம் உதவியுடன் சரக்கு வாகனத்தை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 



Next Story