கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
கொடைக்கானல் ரோஜா பூங்காவில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
குளு குளு கொடைக்கானல்
சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் நிலவும் குளு குளு சீதோஷ்ணநிலையை அனுபவிக்கவும், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை பார்த்து ரசிக்கவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அளவிலான ரோஜா பூங்கா உள்ளது.
கொடைக்கானலுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இந்த பூங்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரோஜா நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.
பூத்துக்குலுங்குகின்றன
இதையடுத்து பூங்காவில், தற்போது 16 ஆயிரம் ரோஜா செடிகள் உள்ளது. இந்த செடிகளில் ஆயிரக்கணக்கான ரோஜா பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
இதில் சன் கோல்டு, சம்மர் டிரீம், பிரின்சஸ், பெர்ப்யூம், டிலைட், ஈபிள் டவர், கிலோட், அப்பையர் என ஆயிரத்து 500 வகையான ரோஜாபூக்கள் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்து உள்ளன. இந்த பூக்களை ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
பூங்கா முழுவதும் தற்போது ரோஜா பூக்கள் பூத்துக்குலுங்குவதால் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Related Tags :
Next Story