தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் மானியத்தில் செடிகள் வினியோகம்
தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் மானியத்தில் செடிகள் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக உதவி இயக்குனர் இளவரசன் கூறினார்.
திருமக்கோட்டை:-
தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் மானியத்தில் செடிகள் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக உதவி இயக்குனர் இளவரசன் கூறினார்.
கொய்யா நடவு
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள ராதாநரசிம்மபுரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2022-ம் நிதி ஆண்டில் கொய்யா நடவு செய்யப்பட்ட விவசாயியின் தோட்டத்தை தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களான ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்ற செடிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
மானியத்தில்...
அதன்படி கடந்த ஆண்டு ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் கோவலன் என்ற விவசாயிக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 277 கொய்யா பதியன்கள் மானியத்தில் வழங்கப்பட்டது. இந்த கொய்ய செடிகள் நடவு செய்யப்பட்ட தோட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது துணை தோட்டக்கலை அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளங்கோவன், தினேஷ்பாபு, கவியரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story