மெழுகுவர்த்தி ஏற்றி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்பு


மெழுகுவர்த்தி ஏற்றி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 12 May 2022 8:28 PM IST (Updated: 12 May 2022 8:28 PM IST)
t-max-icont-min-icon

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏற்றி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அடுக்கம்பாறை

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. டீன் செல்வி தலைமை தங்கினார்.

 மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், தலைமை செவிலியர்கள் சோபியா, உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதில் செவிலியர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சேவை செய்வதாக கையில் மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Next Story