சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா


சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 12 May 2022 8:37 PM IST (Updated: 12 May 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

பண்பொழியில் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தென்காசி:

தென்காசி அருகே உள்ள பண்பொழியில் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மேல ஊர்ச்சாவடி சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தொழிலதிபரும், சங்கரன்கோவில் ஏ.வி.கே. கல்வி குழும தலைவருமான அய்யாத்துரை பாண்டியன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். முன்னதாக கரிசல் குடியிருப்பில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் பண்பொழி பேரூராட்சி மன்ற துணைத் தலைவி நாகலட்சுமி, வார்டு கவுன்சிலர்கள் கணேசன், ஜோதி சுப்பையா கண்ணு, மாரி, சமுதாய நாட்டாண்மைகள் குமரேசராஜா, அய்யாத்துரை பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, செயலாளர் சரவணன், பொருளாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் மாரியப்பன், ஜோதிடர் மாரியப்பன், பேச்சிமுத்து, பூலோக ராஜ், பழனி, சதீஷ், ராஜா, அருணாசலம், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story