கலசபாக்கம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்


கலசபாக்கம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 May 2022 8:38 PM IST (Updated: 12 May 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீட்டம்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலை முறையாக வழங்காமல் வார்டு வாரியாக பிரித்து வழங்குவதால் குளறுபடி ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எனவே, பழைய முறைப்படியே இந்த வேலை திட்டத்தை வழங்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சீட்டம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story