மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம்
மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது.
மன்னார்குடி:-
திருவாரூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு உதவி கலெக்டர் அழகர்சாமி தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா முன்னிலை வகித்தார். முகாமில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம் ஆகிய வட்டங்களில் இருந்து வந்திருந்த 43 மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டரிடம் வழங்கினர். இதில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ஆணையும், 4 பேருக்கு வங்கி கடனுதவி ஆணையும், 10 பேருக்கு ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையையும் உதவி கலெக்டர் வழங்கினார். முகாமில் தனி தாசில்தார்கள் குணசீலி, தனசேகரன், மலைமகள், ராஜகணேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story