உலக செவிலியர் தினம்
சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டாக்டர் செந்தில் சேகர் தலைமை தாங்கினார். டாக்டர்கள் கிருஷ்ணவேணி, வேலம்மாள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் கணபதி, கமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் ரமேஷ் வரவேற்றார். டாக்டர் ராஜாமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் டாக்டர்கள் ரதிதேவி, உமாமகேஸ்வரி, செவிலியர் இந்திரா, இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் ஹரிஹர சுப்பிரமணியன், செயலாளர் வழக்கறிஞர் சதீஷ் மற்றும் செவிலியர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செவிலியர் தங்கம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story