உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த கூடாது


உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த கூடாது
x
தினத்தந்தி 12 May 2022 9:00 PM IST (Updated: 12 May 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

உணவு பொருட்களை பார்சல் செய்து கொடுப்பதற்கு ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த கூடாது என்று நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

பொள்ளாச்சி

உணவு பொருட்களை பார்சல் செய்து கொடுப்பதற்கு ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த கூடாது என்று நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சியாமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஒரு முறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் சில உணவகங்கள், கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீ, காபி, சட்னி, சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவரில் கட்டி கொடுக்க கூடாது. சில்வர் பாத்திரங்கள் கொண்டு வந்து பார்சல் வாங்கும் பொதுமக்களுக்கு உணவு பொருட்களில் தள்ளுப்படி கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு மறு சுழற்சி செய்ய கூடிய பொருட்களை பயன்படுத்தலாம். இதற்கான செலவை வாடிக்கையாளர்களிடம் கடை உரிமையாளர்கள் வசூலித்து கொள்ளலாம். மேலும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்துவது தெரியவந்தால் கடையை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூட்டத்தில் நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story