வால்பாறையில் லேசான மழை
வால்பாறையில் லேசான மழை
வால்பாறை
வால்பாறையில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதனால் வால்பாறை பகுதி முழுவதும் கோடையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தேயிலை செடிகளும் காய்ந்து போகத் தொடங்கியது. இந்த நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி விட்டு விட்டு கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழை மே மாதத்திலும் தொடர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்தது. இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள அசானி புயல் காரணமாக மேகமூட்டமாக இருந்த நிலையில் வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதி முழுவதும் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தலையில் பிளாஸ்டிக் பைகளை போட்டுக்கொண்டு தேயிலை இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story