தூத்துக்குடியில் வாலிபரை தாக்கிய 5 பேருக்கு ஜெயில் தண்டனை


தூத்துக்குடியில் வாலிபரை தாக்கிய 5 பேருக்கு ஜெயில் தண்டனை
x
தினத்தந்தி 12 May 2022 9:18 PM IST (Updated: 12 May 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வாலிபரை தாக்கிய 5 பேருக்கு கோர்ட்டில் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி:
திருச்செந்தூர் அருகே உள்ள பிலோமிநகரை சேர்ந்தவர் கன்னிமுத்து (வயது 24). கடந்த 21.09.2019 அன்று அதே பகுதியை சேர்ந்த அந்தோணி சிவா, பிரவீன், அந்தோணி கவாஸ்கர், அந்தோணி வசந்த், கபில்ராஜா ஆகிய 5 பேரும் சேர்ந்து கன்னிமுத்தின் தங்கையை கேலி செய்தனர். இதனை கன்னிமுத்து கண்டித்தார்.இதில் ஆத்திரம் அடைந்த 5 பேரும் சேர்ந்துன கன்னிமுத்தை சாதியை சொல்லி திட்டி தாக்கினர்.
இது குறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட சிறப்பு அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனில்குமார், குற்றம் சாட்டப்பட்ட அந்தோணி சிவாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், பிரவின், கவாஸ்கர், வசந்த், கபில் ஆகிய 4 பேருக்கும் தலா ஒரு ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை  தீர்ப்பு கூறினார்.


Next Story