திருப்பத்தூர் மாவட்டத்தில் 18-ந் தேதி முதல் ஜமாபந்தி
திருப்பத்தூர் மாவட்டத்தில் 18-ந் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 18-ந் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது. நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல், அரசு நலத்திட்டங்களின் கீழ் நிதி உதவி கோருதல் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக பொதுமக்கள் வரும் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை ஜமாபந்திக்கான கோரிக்கை மனுக்களை தங்கள் பகுதிக்குள்பட்ட தாலுகா அலுவலகங்களில் நேரடியாக ஜமாபந்தி அலுவலர்களால் பெறப்படும்.
எனவே ஜமாபந்திக்கு வரும் பொதுமக்கள் முககவசம் மற்றும் தனிநபர் இடைவெளியினை பின்பற்றி மனு அளித்து பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story