கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
விழுப்புரம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி,
விழுப்புரம் அருகே உள்ள வேலியந்தல் என்ற ஊரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பாபு(வயது 34), மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி நதியா(31). இவர் நேற்று காலையில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நதியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story