பஞ்சமாதேவி, தொடர்ந்தனூர் ஊராட்சிகளில் அதிகாரிகள் ஆய்வு
மணிமேகலை விருது வழங்குவதற்காக பஞ்சமாதேவி, தொடர்ந்தனூர் ஊராட்சிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புற சுய உதவிக்குழுக்கள், பகுதி, தொகுதி அளவிலான கூட்டமைப்பு, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மணிமேகலை விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த விருதிற்கான ஊராட்சிகள் தேர்வு குறித்து தமிழக அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் செல்வராசு தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், மண்டல உதவி திட்ட அலுவலர் வில்லியம்ஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சமாதேவி, கோலியனூர் ஒன்றியம் தொடர்ந்தனூர் ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் உதவி திட்ட அலுவலர்கள் விஜயகுமார், கலைவாணன், முருகானந்தம், கவுதமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம், மகளிர் திட்ட மேலாளர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வம், கவிதா செந்தில்குமார், வட்டார இயக்க மேலாளர் கணேசன், ஊராட்சி செயலாளர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story