சோளிங்கர்லட்சுமி நரசிம்மர் கோவில் தேர் திருவிழா


சோளிங்கர்லட்சுமி நரசிம்மர் கோவில் தேர் திருவிழா
x
தினத்தந்தி 12 May 2022 10:03 PM IST (Updated: 12 May 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா நேற்று நடந்தது. திரளானபக்தர்கள் கலந்துகொண்டனர்.

சோளிங்கர்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது. திரளானபக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேர் திருவிழா

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி  மலைக்கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வெவ்வேறு வாகனங்கத்தில் பக்தோசிதப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தோசிப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யட்டது. தொடர்ந்து தேரில் எழுந்தருளினர்.

பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

அதைத்தொடர்ந்து சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம், கோவில் உதவி ஆணையர் ஜெயா, நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், துணைத் தலைவர் பழனி, காங்கிரஸ் நகர தலைவர் கோபால், கோவில் கண்காணிப்பாளர் விஜயன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.

மங்கல வாத்தியங்களுடன் நான்கு மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். தேர் திருவிழாவில் சோளிஙகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
தேர் திருவிழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story