கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியர்கள்


கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியர்கள்
x
தினத்தந்தி 12 May 2022 10:06 PM IST (Updated: 12 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பட்டை அணிந்து செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

செஞ்சி, 

செஞ்சி அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட தொகுப்பூதியம் பெறும் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர் தினமான  கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொகுப்பூதியம் பெறும் செவிலியர்கள் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் அம்பேத்கர் கணபதி கூறுகையில், தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் தொகுப்பூதியம் பெறுபவர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தது. ஆனால் இதுவரை எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை, எனவே தமிழ்நாடு முழுவதும் 11 ஆயிரத்து 300 தொகுப்பூதிய செவிலியர்கள்  கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Next Story