ஏலகிரிமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம்
ஏலகிரிமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை, சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் அமைச்சகத்தின் மூலம் தொண்டு நிறுவனமும் இணைந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கினார். முகாமில் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களின் மேம்பாடு, விவசாயம் மேம்பட பாசன வசதி செய்து தருதல், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆவதற்கான அறி குறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு முகாமில் வழக்கறிஞர் அமுதவாணன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story