திரளான பக்தர்கள் பால்குட ஊர்வலம்
சாமந்தான்பேட்டை காமாட்சி அம்மன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
வெளிப்பாளையம்:
நாகை சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோவிலில்சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் அம்ச வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக பால்பண்ணைச்சேரி ஜெய பத்திர காளியம்மன் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர்.பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
----
Related Tags :
Next Story