காட்டு யானைகள் நடமாட்டம்


காட்டு யானைகள் நடமாட்டம்
x
தினத்தந்தி 12 May 2022 10:36 PM IST (Updated: 12 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
காட்டு யானைகள்
வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி, எப்ரி, மகாராஜகடை வனபகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது.
நேற்று இரவு கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்கு வந்த 11 காட்டு யானைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து தமிழக எல்லை வனப்பகுதியில் சுற்றி வருகிறது. இந்த நிலையில் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வரலாம் என வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு வெடித்து
தமிழக வனத்துறையினர் 20 பேர் கொண்ட குழு 2 பிரிவுகளாக பிரிந்து யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் ஊருக்குள் யானை வராமல் தடுக்க பட்டாசு வெடித்து யானைகளை விரட்டி வருகின்றனர்.
மேலும் வனப்பகுதிகளில் யானைகள் உள்ளதால் விவசாயிகள், ஆடு, மாடுகள் மேய்க்கும் விவசாயிகள்வனப்பகுதிக்கும், இரவு நேரத்தில் வயல்வெளிகளில் தங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்திஉள்ளனர்.

Related Tags :
Next Story