டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு கோரிக்கை


டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2022 12:30 AM IST (Updated: 12 May 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

திருட்டுகளை தடுக்க டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்:-

திருட்டுகளை தடுக்க டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கோரிக்கை மனு

திருவாரூரில் பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கோபு தலைமையில் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில செயலாளர் ராஜகோபால், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மாவட்ட துணைத்தலைவர் ஜீவா ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரத்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணி முதல் மறுநாள் கடை திறக்கும் நேரமான மதியம் 12 மணி வரை அரசாங்கமே பாதுகாவலர்களை நியமித்து கடையினை கண்காணித்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் டாஸ்மாக் கடை ஊழியர்களை கடையில் தூங்க சொல்லி போலீசார் வற்புறுத்துவது சட்டவிரோதமான செயலாகும். 
இந்த செயலை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் கடைகளில் நடைபெறும் திருட்டுகளுக்கு கடை ஊழியர்களை பொறுப்பாக்குவதை கைவிட வேண்டும். 
டாஸ்மாக் கடைகளில் அரசு செலவில் கண்காணிப்பு கேமரா அமைத்து, திருட்டை தடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் திருட்டு சம்பங்களை தடுக்க பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக கடைகளை இடமாற்ற வேண்டும். 

பதிவு செய்ய வேண்டும்

கடைகளுக்கு ஆய்வு செய்ய வருகை தரும் அதிகாரிகள் கடையில் நடக்கும் குற்றங்களை கடையில் இருக்கும் ஆய்வு பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும். எதுவும் எழுதாமல் வெள்ளை காகிதத்தில் கையெழுத்துப்போட சொல்லி வற்புறுத்தி, அதன் ரீதியாக எடுக்கும் நடவடிக்கைக்கு எந்த காலத்திலும் ஊழியர்கள் பொறப்பு ஏற்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story