ஆம்பூரில் நடக்க இருந்த பிரியாணி திருவிழா திடீர் ரத்து
ஆம்பூரில் நடக்க இருந்த பிரியாணி திருவிழா திடீரென ரத்து செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் ஆம்பூர் பிரியாணி திருவிழா நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்து வந்தது. இதனிடையே பிரியாணி திருவிழாவில் ‘பீப்’ பிரியாணியும் இடம்பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் பிரியாணி திருவிழா தற்காலிகாமாக ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 13, 14 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய கனமழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற இருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழா, பொதுமக்கள் பங்குபெற ஏதுவாக அமையாது. எனவே, பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரியாணி திருவிழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தாயாரான நிலையில் திடீரென பிரியாணி திருவிழாவை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story