புளியமரத்தின் மீது கார் மோதி டிரைவர் பலி
கமுதி அருகே புளியமரத்தின் மீது கார் மோதியதில் டிரைவர் பலியானார்.
கமுதி,
கமுதி அருகே புளியமரத்தின் மீது கார் மோதியதில் டிரைவர் பலியானார்.
கார் டிரைவர்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அங்காளஈஸ்வரி அம்மன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 47). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சொந்தமாக கார் ஒன்றை வைத்துள்ளார். அந்த காரை தானே டிரைவராக இருந்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சாயல்குடியில் இருந்து மதுரைக்கு காரில் சவாரி சென்றுள்ளார். மதுரையில் ஆட்களை இறக்கிவிட்டு விட்டு சாயல்குடி நோக்கி காரை ஓட்டி வந்துள்ளார்.
மரத்தில் கார் மோதியது
அப்போது பெருநாழி அருகே துத்திநத்தம் பகுதியில் கார் வந்த போது சாலையோரத்தில் உள்ள புளியமரத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story