வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி
தியாகதுருகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் மலையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). தியாகதுருகம் நடுத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒயர்மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும், சக்திவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ராஜேந்திரன் தனது மகன் புகழேந்திக்கு மின்சார வாரியத்தில் வேலை தாங்கி தருமாறு சக்திவேலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.11 லட்சம் கேட்டுள்ளார். அதன்படி ரூ.11 லட்சத்தை சக்திவேலிடம் ராஜேந்திரன் கொடுத்துள்ளார்.அப்போது உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த போர்மேன் ரங்கராஜன் என்பவர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சக்திவேல் கூறியபடி புகழேந்திக்கு வேலைவாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு ராஜேந்திரன் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரூ.6 லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார். இதையடுத்து மீதமுள்ள பணத்தை தருமாறு ராஜேந்திரன் கேட்டபோது அவரை சக்திவேல். ரங்கராஜன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரன் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதையடுத்து நீதிமன்றம் உத்தரவுப்படி சக்திவேல், ரங்கராஜன் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறேன்.
Related Tags :
Next Story