பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்


பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 12 May 2022 11:03 PM IST (Updated: 12 May 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொது வினியோக திட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல்துறை மூலம் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடத்தப்பட உள்ளது. அதன்படி, நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மயிலாடுதுறை தாலுகாவில் பூதங்குடி கிராமம், தரங்கம்பாடி தாலுகாவில் கிளியனூர் கிராமம், சீர்காழி தாலுகாவில் ஓதவந்தான்குடி மற்றும் குத்தாலம் தாலுகாவில் வில்லியநல்லூர் கிராமங்களில் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் முகாம் நடைபெறவுள்ளது.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள், கைப்பேசி எண் மாற்றம் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், கடை மாற்றம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற கோரிக்கைகளை நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் மனுக்கள் மூலமாக தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளாா்.


Next Story