தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 May 2022 11:04 PM IST (Updated: 12 May 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பம் 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ள மாயனூர் ரெயில்வே கேட் பகுதியிலிருந்து காட்டூருக்கு செல்லும் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கார்த்திக்,மாயனூர், கரூர். 

அரசு மினிபஸ் இயக்கப்படுமா? 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், உத்திரக்குடி வழியாக உதயநத்தம், அணைக்கரை செல்வதற்கு பஸ் வசதி இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் அரசு மினி பஸ் சேவையை தொடங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
விக்னேஷ், உத்திரக்குடி, அரியலூர். 

அடிப்படை வசதிகள் செய்துதரப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் 23-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை.  துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வராததன் காரணமாக ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நின்று இப்பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை.

Next Story