கரூர் பகுதியில் சாரல் மழை
கரூர் பகுதியில் சாரல் மழை பெய்தது.
கரூர்,
கரூரில் காலை முதல் வெயிலின் தாக்கம் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் வரை பெய்தது. இதனால் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதியம் 3 மணியில் இருந்து 3.30 மணி வரை விடாமல் மழை பெய்தது. இதேபோல் கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை சாரல் மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story