மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவாடானை அருகே மூதாட்டியை கொன்று பணம் பறித்த மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ராமநாதபுரம்,
திருவாடானை அருகே மூதாட்டியை கொன்று பணம் பறித்த மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மூதாட்டி கொலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆயிரவேலி பகுதியை சேர்ந்தவர் ஜெயமங்கலம் என்பவரின் மனைவி பூங்கோதை (வயது 65). கடந்த பிப்ரவரி மாதம் இவர் வீட்டில் தனியாக இருந்த போது 2 பேர் வீடு புகுந்து அவரை பலமாக தாக்கியதில் பூங்கோதை பரிதாபமாக இறந்தார் வீட்டில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலபனையூர் மாரிமுத்து மகன் கலைமணி (31) மற்றும் கீழபனையூரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஆதி (20) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கலைமணி ஏற்கனவே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆதியையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் மேற்கண்ட ஆதி என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஆதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story