நாமக்கல்லில் சாரல் மழை


நாமக்கல்லில் சாரல் மழை
x
தினத்தந்தி 12 May 2022 11:08 PM IST (Updated: 12 May 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சாரல் மழை

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. நாமக்கல் நகரை பொருத்தவரையில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இதனால் அக்னி நட்சத்திர வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பினர். இதற்கிடையே இரவு 8 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 10 மணிக்கு மேலும் நீடித்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

Next Story