மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்: தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 12 May 2022 11:11 PM IST (Updated: 12 May 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கரூர், 
கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும்போது, ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் டெண்டர் பணிகள் குறித்து தெரியப்படுத்துவதில்லை என்றனர். இதற்கு தி.மு.க. கவுன்சிலர், அனைவருக்கும் ஒரே மாதியாக தான் டெண்டர் பணிகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது என்றார். இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் பேசும்போது, அ.தி.மு.க. கவுன்சிலர்களை மிரட்டுகிறார்கள், பணிகளை செய்யவிடாமல் தடுக்கின்றனர் என கூறினார். அப்போது கூட்டத்திற்கு, சம்பந்தமில்லாத கருத்துகளை பேசுவதாகக்கூறி தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Next Story