வீடு புகுந்து மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
வீடு புகுந்து மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறித்து செல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்:-
திருவாரூர் அருகே உள்ள விளமல் தியாகராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவருடைய வீட்டு வராண்டாவில் அவரது தாயார் மல்லிகா (வயது 60) சோபாவில் அமர்ந்து செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் வந்த மர்ம நபர் ஒருவர் மல்லிகா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் சுதாரித்து சத்தம் போடுவதற்குள், அங்கிருந்து மர்ம நபர் தப்பி, அருகில் நிறுத்தி வைத்திருந்த மோட்டர் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். தகவலறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். இதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர், மேலும் 2 வாலிபர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பியது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story