ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வாலிபர் தற்கொலை
நல்லம்பள்ளி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.
நல்லம்பள்ளி:
ஆன்லைன் சூதாட்டம்
குரும்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் வெங்கடேஷ் (வயது 22). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கடேஷ் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் விளையாடியதாக தொிகிறது. இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வெங்கடேஷ் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வெங்கடேஷ் வீட்டில் தனியாக இருந்த போது விஷத்தை தின்று மயங்கி கிடந்தார். இதனை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பனின்றி வெங்கடேஷ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story