10 பெண்கள் உள்பட 35 பேர் மீது வழக்கு
நல்லம்பள்ளி அருகே 500-க்கும் மேற்பட்ட மா மரங்களை வெட்டி சாய்த்ததில் 10 பெண்கள் உள்பட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.
நல்லம்பள்ளி:
500 மாமரங்கள்
நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி பகுதியை சோ்ந்தவா் தேவகி (வயது 55). இவருடைய நிலத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 50 போ் கொண்ட மா்ம கும்பல் புகுந்து 500-க்கும் மேற்பட்ட மா மரங்களை வெட்டி சாய்த்தும், ஜெ.சி.பி எந்திரம் மூலம் வேறோடு மரங்களை அகற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிலத்தில் அத்துமீறி 500 மாமரங்களை வெட்டி சாய்த்த மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், காவல்துறை வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தர்மபுரி மாவட்ட கூடுதல் மகிளா கோா்ட்டில் தேவகி மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்மபுரி கூடுதல் மகிளா கோா்ட்டில் தொப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்பேரில் 500 மாமரங்களை வெட்டி சாய்த்தது தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
35 போ் மீது வழக்குப்பதிவு
போலீசார் விசாரணையில் சாமிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் (50), மகாலிங்கம் (55), சென்னகேசவன் (43), சண்முகம் (45), முருகேசன் (45) உள்பட 10 பெண்கள், 20 ஆண்கள் என 35 பேர் மீது 8 பிரிவுகளின்கீழ் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story