தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்


தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்
x
தினத்தந்தி 13 May 2022 12:02 AM IST (Updated: 13 May 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 17-ந்் தேதி ஆற்காடு நகரத்தில் நடைபெறுகிறது. இதில் நாஞ்சில் சம்பத், சிங்கை சவுந்தர் ஆகியோர் பேசுகிறார்கள். 18-ந்் தேதி அரக்கோணம் நகரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், முரசொலி மூர்த்தி ஆகியோர் பேசுகிறார்கள். 21-ந் தேதி ராணிப்பேட்டை நகரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் செந்தில்குமார் எம்.பி, செங்கை சந்தானம் ஆகியோர் பேசுகிறார்கள். 22-ந்் தேதி சோளிங்கர் நகரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஆவடி பாஸ்கர், ராஜீவ் காந்தி ஆகியோர் பேசுகிறார்கள். பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நகர செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Next Story