இலங்கை சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்: மணமேல்குடி கடலோர பகுதியில் தீவிர வாகன சோதனை


இலங்கை சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்: மணமேல்குடி கடலோர பகுதியில் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 13 May 2022 12:07 AM IST (Updated: 13 May 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடி கடலோர பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மணமேல்குடி:
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, பொதுமக்கள் தீவிரமான போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வன்முறை சூழ்நிலையை பயன்படுத்தி 58 சிறை கைதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் சிறையில் இருந்து தப்பித்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து தப்பித்த இந்த 58 சிறை கைதிகளும் கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழையலாம் என எச்சரிக்கை தகவலும் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் கடல் பகுதி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாகனங்களில் வருபவர்களின் அடையாள அட்டைகளை பார்த்த பிறகே அனுப்பி வைக்கின்றனர். மேலும் ரோந்து படகின் மூலம் கடலில் ரோந்து பணியிலும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story