தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.281 வழங்க கோரிக்கை


தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.281 வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2022 12:12 AM IST (Updated: 13 May 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.281 வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

பெரம்பலூர், 
பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.281 கூலி வழங்க வேண்டும். காலையில் 7 மணிக்கு வர வேண்டும் என நிர்பந்தப்படுத்துவதை கண்டிப்பதுடன், 9 மணிக்கு தொழிலாளர்கள் வருகை தர அனுமதிக்க வேண்டும். இட மற்றவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா உடனடியாக வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொழிலாளர்களை திரட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் புதிய மாவட்ட செயலாளராக கலையரசியும், மாவட்ட தலைவராக முருகேசனும், மாவட்ட பொருளாளராக காமராஜூம் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 15 பேர் மாவட்ட குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story