பலத்த காற்றினால் மின்கம்பம் சாய்ந்தது
வேப்பந்தட்டை அருகே பலத்த காற்றினால் மின்கம்பம் சாய்ந்தது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட விஜயபுரம் மின்பகிர்மான பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது உயர் அழுத்த மின் பாதையில் தென்னை மரம் விழுந்து நெல் வயலில் நடப்பட்டிருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால் விஜயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அரும்பாவூர் பகுதி மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் சாய்ந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு வேறு இடத்தில் புதிய மின் கம்பத்தை உடனடியாக நட்டு சீர் செய்தனர். இதனைதொடர்ந்து விஜயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மின்வினியோகம் சீரானது.
Related Tags :
Next Story