போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி பொருட்களை திருடிய 4 பேர் கைது


போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி பொருட்களை திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2022 12:24 AM IST (Updated: 13 May 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி பொருட்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் 

கடலூர் அருகே பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. செயல்படாத இந்த ஆலையில் பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிர கம்பிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை கொள்ளையர்கள் திருடி வருகிறார்கள்.  அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஆலைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கு கிடந்த இரும்பு குழாய், தாமிர கம்பி உள்ளிட்டவைகளை திருடிக்கொண்டிருந்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு 

இதுபற்றி அறிந்து வந்த புதுச்சத்திரம் போலீசார், ஆலை காவலாளிகளுடன் சேர்ந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் 5 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து போலீசார் மீது வீசிவிட்டு ரூ.25 லட்சம் மதிப்புள்ள இரும்பு தளவாட பொருட்கள், தாமிர கம்பிகளை திருடிச்சென்றனர். இதில் போலீசார் காயமின்றி தப்பினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 50 கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த வழக்கில் தொடர்புடைய சித்திரைப்பேட்டையை சேர்ந்த நற்குணம் (வயது 50), ஜெகதீசன்(47), புதுக்குப்பத்தை சேர்ந்த விஜய்(25), குள்ளஞ்சாவடியை சேர்ந்த பிரபாகரன்(22) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Next Story