தேசிய கருத்தரங்கம்


தேசிய கருத்தரங்கம்
x
தினத்தந்தி 13 May 2022 12:33 AM IST (Updated: 13 May 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் தொழில் நிர்வாகவியல் துறையும், திருச்சிராப்பள்ளி இந்திய கல்வி ஆராய்ச்சியாளர்கள் கழகமும் இணைந்து நடத்திய ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

காரைக்குடி,
அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் தொழில் நிர்வாகவியல் துறையும், திருச்சிராப்பள்ளி இந்திய கல்வி ஆராய்ச்சியாளர்கள் கழகமும் இணைந்து நடத்திய ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி தலைமை தாங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் தொழில் நிர்வாகவியல் துறை தலைவர் தியாகராஜன் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி இந்திய கல்வி ஆராய்ச்சியாளர்கள் கழகத்தின் தலைவர் பரமசிவம் சிறப்புரையாற்றினார். பெங்களூரு பிரசிடென்சி பல்கலைக்கழகத்தின் நிர்வாகவியல் துறை பேராசிரியர் கஜபதி கருத்துரை வழங்கினார். இதில் மாணவர்கள் ஆய்வறிக்கை எழுதுவது எப்படி என்றும் அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றியும், ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் பதிப்பிப்பது எப்படி என்பது பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது. இதில் ஏராளமான பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Next Story