பெண்ணிடம் 7½ பவுன் நகை பறித்த 2 பேர் கைது


பெண்ணிடம் 7½ பவுன் நகை பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2022 1:25 AM IST (Updated: 13 May 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 7½ பவுன் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, 
திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரை சேர்ந்த மாரிமுத்து மனைவி வெங்கடேஸ்வரி (வயது 29). இவர் கால்நடை உதவியாளர் பணி நேர்முகத்தேர்வுக்காக மதுரைக்கு வந்திருந்தார். மேலஅனுப்பானடியில் உள்ள அவரது தம்பி வீட்டில் தங்கியிருந்து தேர்வுக்கு செல்வதற்கு தயாராக இருந்தார். இந்த நிலையில் தேர்வு ரத்தானது. அன்றைய தினம் அவரது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் தர்காவில் கயிறு கட்டுவதற்காக தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் காமராஜர்சாலை சவுராஷ்டிரா பள்ளி அருகே தர்காவிற்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த போது ஒருவர் வெங்கடேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த நகை பறிப்பு சம்பவம் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே குற்றவாளிகளை உடனே பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் கடுமையான குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காசி, தெப்பகுளம் இன்ஸ்பெக்டர் முஹம்மது இத்ரீஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நகையை பறித்தவர்களின் அடையாளம் தெரிந்தது. இதையடுத்து ஒத்தக்கடையில் பதுங்கியிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்வ ஸ்ரீவர்ஷன் (21), செண்பக மூர்த்தி (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரை, கமிஷனர் பாராட்டினார்.

Related Tags :
Next Story