தண்ணீர் தேடி வரும் மான்கள், நாய்கள் கடித்து பலியாகும் நிலை


தண்ணீர் தேடி வரும் மான்கள், நாய்கள் கடித்து பலியாகும் நிலை
x
தினத்தந்தி 13 May 2022 1:26 AM IST (Updated: 13 May 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் தண்ணீர் தேடி வரும் மான்கள் நாய்கள் கடித்தும், விபத்துக்களில் சிக்கியும் பலியாகும் நிலை தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சிவகாசி,
சிவகாசி பகுதியில் தண்ணீர் தேடி வரும் மான்கள் நாய்கள் கடித்தும், விபத்துக்களில் சிக்கியும் பலியாகும் நிலை தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மான்கள்
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக் கோட்டை ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அதிக அளவில் மான்கள் உள்ளன. கடந்த காலங்களில் 100-க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த மான்கள் தற்போது அதிகளவில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு 300-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. 
மேற்கண்ட பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மான்கள் தண்ணீரை தேடி நகருக்குள் வருகிறது. சில நேரங்களில் மான்கள் வழிதவறி போக்குவரத்து உள்ள பகுதிகளுக்கு வந்து வாகனங்களில் சிக்கி இறக்க நேரிடுகிறது. பல நேரங்களில் நாய்கள் கடித்து இறக்க நேரிடுகிறது.
இவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்த மான் ஒன்று தெரு நாய்கள் கடித்து காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த சம்பவம் நடந்துள்ளது. 
தண்ணீர் தொட்டி
இதுகுறித்து சமூக ஆர்வலர் நாரணாபுரம் போத்தீஸ் சீனி வாசன் கூறியதாவது,
சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய தாலுகாக்களில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும். குடிநீர் இல்லாததால் மான்கள் குடியிருப்பு பகுதிக்கு வரும் நிலை உள்ளதால் வனப்பகுதியில் சிறிய அளவிலான தொட்டிகளை கட்டி அதில் தண்ணீர் நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அவ்வாறு இல்லை என்றால் மான்கள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து நாய்கள் மற்றும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்க நேரிடும். இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story