நித்திரவிளை அருகே ஆட்டோவில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


நித்திரவிளை அருகே ஆட்டோவில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 13 May 2022 1:26 AM IST (Updated: 13 May 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே ஆட்டோவில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கொல்லங்கோடு, 
நித்திரவிளை அருகே ஆட்டோவில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி பறிமுதல்
நித்திரவிளை போலீஸ் நிலைய ஏட்டு வாசுதேவன் நேற்று காலை நித்திரவிளை அருகே மங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி ஒரு ஆட்டோ வந்தது. உடனே, ஆட்டோவை நிறுத்தும்படி சைகை காட்டினார். ஆனால், டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். ஏட்டு வாசுதேவன் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தார். இதையடுத்து ஆட்டோைவ சோதனை செய்தபோது, அதில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதைெதாடர்ந்து ரேஷன் அரிசியுடன் ஆட்டோவை பறிமுதல் செய்து நித்திரவிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் தேங்காப்பட்டணம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதைடுத்து ஆட்டோ டிரைவரான பட்டணம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்தனர். பின்னர், அரிசி மற்றும் ஆட்டோவை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story