அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா
ஆலங்குளம் அருகே அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள கல்லமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் பாபுஜி தலைமை தாங்கினார். கல்லமநாயக்கர்பட்டி ஊராட்சி துணை தலைவர் தர்மராஜ், கல்லமநாயக்கர்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 25 ஆண்டுகாலம் செவிலியராக பணிபுரிந்த சவுந்தரபாண்டி அவர்களுக்கு, கல்லமநாயக்கர்பட்டி தொழிலதிபர் ருக்குமணி சோலைச்சாமி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதில் டாக்டர்கள் சுபாஷினி, நவின்குமார், சசிகலா, சுகாதார ஆய்வாளர் மதியரசு, ஆடிட்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் செவிலியர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் கண் மருத்துவ அலுவலர் பால்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story