‘தாய் உள்ளத்துடன் தன்னலமற்ற சேவை புரிபவர்கள் செவிலியர்கள்’
தாய் உள்ளத்துடன் தன்னலமற்ற சேவை புரிபவர்கள் செவிலியர்கள் என்று மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தெரிவித்தார்.
சிவகங்கை,
தாய் உள்ளத்துடன் தன்னலமற்ற சேவை புரிபவர்கள் செவிலியர்கள் என்று மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தெரிவித்தார்.
செவிலியர் தின விழா
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் தின விழா மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அவர் பேசியதாவது:-
மருத்துவ உலகத்தின் தாயாக கருதப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கடந்த 1820-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி பிறந்தார். அவரது பிறந்தநாளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதியை செவிலியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
கொரோனா காலத்தில் தன் குடும்பத்தையும் குழந்தைகளையும் மறந்து அவர்கள் இரவு பகல் பாராமல் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்ற போராடினார்கள். தாய் உள்ளத்துடன் தன்னலமற்ற சேவை புரியும் செவிலியர்களை வணங்கி பாராட்டி மகிழ்வோம். சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் 270 செவிலியர்களும் 21 செவிலியர் கண்காணிப்பாளர்களும் 62 தற்காலிக செவிலியர்களும் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரையும் செவிலியர் தினத்தில் பாராட்டி வாழ்த்துகிறேன்
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து செவிலிய கண்காணிப்பாளர் களுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். விழாவில் மருத்துவக் கல்லூரி உதவி முதல்வர் ஷர்மிளா திலகவதி, மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் பாலமுருகன், மருத்துவ அலுவலர் முகமது ரபி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
செவிலியர் பணி மகத்தானது
சிவகங்கை மருத்துவ கல்லூரி செவிலியர் மாதவி காளீஸ்வரன் கூறும் போது:-
செவிலியர் பணி மிகவும் மகத்தானது. ஒரு தாய் தன்னுடைய குழந்தையை பெறுவதற்கு முன்பாகவே தனது கையில் ஏந்தி முதல் பணிவிடை செய்து இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்யும் தாய் தான் செவிலியர்கள். இந்த பணி மிகவும் கடினமானது. இரவு பகல் பாராமல் பணிபுரிய வேண்டும் இதனால் அதிக மனச்சுமை ஏற்படும். ஆனால் அந்த நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு செல்லும் பொது பாசத்துடன் தங்கள் குடும்பத்தில் ஒருவராக எங்களை எண்ணி நன்றி கூறும்போது அனைத்து கஷ்டமும் பறந்து போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story