தி.மு.க. உறுப்பினருக்கு கொலை மிரட்டல்: பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்பட 11 பேர் மீது வழக்கு
தி.மு.க. உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள புதுவயலை சேர்ந்தவர் குமார் (வயது 45).இவர் புதுவயல் நகர பா.ஜனதா முன்னாள் தலைவராக இருந்தார். தற்போது அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார். இவர் பேஸ்புக்கில் (முகநூல்) பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பற்றி அவதூறாக பதிவிட்டு இருந்தாராம். இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சியின் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி என்ற சத்தியநாதன் (வயது 45), குமாரை போனில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அவரது தூண்டுதலின் பேரில், காரைக்குடி 100 அடி சாலையில் குமார் சென்ற போது சிலர் அவரை வழிமறித்து. தாக்கி அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனராம். இது குறித்த புகாரின் பேரில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்டதலைவர் மேப்பல் சத்தியநாதன், மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பரம், புதுவயல் பேரூராட்சி கவுன்சிலர் செல்வா, வேலங்குடி பாண்டித்துரை உள்ளிட்ட 11 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story