கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: 8 பேர் மீது வழக்கு
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
மானாமதுரை,
மானாமதுரை அருகே வேதியரேந்தலில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணிக்கு வேதியரேந்தல் பகுதியான பூக்குளம் பகுதியில் வைகை ஆற்றில் மணல் கடத்திய சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தினார். மணல் கடத்திய கும்பல் கோபாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் புகாரின்பேரில் கீழபசலை கிராமத்தை சேர்ந்த அஜித்( வயது24), பாலமுருகன்(45), அழகு(26), முகேஷ்(24), கார்த்தி(35), அழகர்(30), கலைவாணன்(25), செல்வம்(41) ஆகிய 8 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story