பொது வினியோக திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது


பொது வினியோக திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 13 May 2022 2:35 AM IST (Updated: 13 May 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

பொது வினியோக திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம் 4 கிராமங்களில் நாளை நடக்கிறது.

அரியலூர், 
அரியலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:- அரியலூர் தாலுகாவில் நாகமங்கலம், உடையார்பாளையம் தாலுகாவில் மணகெதி, செந்துறை தாலுகாவில் சிறுகளத்தூர், ஆண்டிமடம் தாலுகாவில் சிலம்பூர் (வடக்கு) ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட ஒவ்வொரு தாலுகாவுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, கூட்டங்களில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story