திருமணம் முடிந்த கையோடு பி.காம் தேர்வு எழுதிய புதுப்பெண்
திருமணம் முடிந்த கையோடு புதுப்பெண் பி.காம் தேர்வை எழுதினார்.
மண்டியா:
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா லிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 19). இவர் பாண்டவபுராவில் உள்ள எஸ்.டி.ஜி. கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மாப்பிள்ளை பார்த்து நிச்சயத்தார்த்தம் செய்திருந்தனர். இந்த நிலையில் பி.காம் படித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. அதே வேளையில் பி.காம் முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வும் நேற்று தொடங்கியது.
படிப்புக்கு திருமணம் தடையாக இருக்க கூடாது என கருதிய ஐஸ்வர்யா, திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுத செல்வதாக தனது கணவர் மற்றும் பெற்றோரிடம் கூறியிருந்தார். அதன்படி தாலிகட்டி முடிந்ததும் திருமண கோலத்தில் ஐஸ்வர்யா கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினார்.
Related Tags :
Next Story