பெருந்துறையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


பெருந்துறையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2022 2:48 AM IST (Updated: 13 May 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

பெருந்துறை
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்சர் காஜி. இவரது மகள்கள் சுல்தானா (வயது 23), ஹனிமஹாதுன் (19). இதில் சுல்தானாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் கணவர் தனுசுலாமுடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஹனிமஹாதுன் பெருந்துறை பணிக்கம்பாளையத்துக்கு வந்தார். அவர் சுல்தானா வீட்டில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹனிமஹாதுன் வேலை முடிந்து வீடு திரும்பினார். பின்னர் தனது படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டு்க்கொண்டார். வெகுநேரமாகியும் கதவை திறக்காததால் சுல்தானா சந்தேகமடைந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது ஹனிமஹாதுன் வீட்டின் விட்டத்தில் துணியால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சுல்தானா பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் ஹனிமஹாதுன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹனிமஹாதுன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று விசாரித்து வருகிறார்கள்.

Next Story