கர்நாடகத்தில் புதிதாக 157 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 157 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 May 2022 3:01 AM IST (Updated: 13 May 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 157 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று 18 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 146 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 2 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 4 பேருக்கும், தார்வார், ஹாசன், கோலார், உடுப்பியில் தலா ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 216 பேர் குணம் அடைந்தனர். 1,884 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story