ரோந்து பணியின்போது போலீஸ்காரரின் வாக்கி-டாக்கி மாயம்


ரோந்து பணியின்போது போலீஸ்காரரின் வாக்கி-டாக்கி மாயம்
x
தினத்தந்தி 13 May 2022 5:44 AM IST (Updated: 13 May 2022 5:44 AM IST)
t-max-icont-min-icon

ரோந்து பணியின்போது போலீஸ்காரரின் வாக்கி-டாக்கி மாயமானது.

உப்பிலியபுரம்:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் செந்தில்(வயது 35). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாக்கி-டாக்கியுடன் எரகுடி பகுதியில் போலீசாருடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது மழை பெய்த நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாக்கி-டாக்கி தவறி விழுந்ததாக உப்பிலியபுரம் போலீசாரிடம் செந்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாக்கி-டாக்கி தவறி விழுந்ததா? அல்லது கவனக்குறைவான நேரத்தில் அதனை மர்மநபர்கள் எடுத்துச் சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story